தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தாக்கம் காரணமாக ஜனவரி 31-ஆம் தேதி வரை மூடப்பட்டிருந்த பள்ளிகள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பள்ளிக்கல்வித்துறை பொதுத்தேர்வு எழுத உள்ள 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் பாடங்களை நடத்தி முடிக்குமாறு ஆசிரியர்களை அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் பெற்றோர்கள் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதாவது நடப்பு கல்வியாண்டு முடிய இன்னும் 2 மாதங்களே உள்ளது. மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறக்கப்பட்டாலும் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்படும். அதேபோல் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தற்போது தேர்வு நடத்தப்படுவது சந்தேகம் தான். எனவே 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.