Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு….. காலை சிற்றுண்டி…. இதோ முழு விவரம்….!!!!

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் என மொத்தமாக 1,545 பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காகவே ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, பசி இல்லாமல் மாணவர்கள் படிப்பை தொடர வேண்டும் என்பதற்காகவும் ஊட்டச்சத்து குறைபாட்டினால் மாணவர்கள் பாதிக்க கூடாது என்பதற்காகவும் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்துவதற்காக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் மூலமாக வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிசுமையும் குறைக்க முடியும். அதன்படி 5 நாட்களுக்கான என்னென்ன உணவு வகைகள் காலை உணவாக கொடுக்கப்படும் என்பதை பார்ப்போம்.

திங்கட்கிழமை – உப்புமா வகை அதாவது, ரவா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார் அல்லது சேமியா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார் அல்லது கோதுமை ரவா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார்

செவ்வாய்க்கிழமை – ஏதேனும் கிச்சடி வகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, ரவா கிச்சடி, சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா காய்கறி கிச்சடி ஆகியவற்றில் ஏதாவது ஒரு கிச்சடி வகை வழங்கப்படும்.

புதன்கிழமை – பொங்கல் வகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, ரவா பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார் அல்லது வெண் பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார் கொடுக்கப்படும்.

வியாழக்கிழமை – சேமியா உப்புமா வகை உணவுகள் பரிமாறப்படும். அதாவது, சேமியா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார் அல்லது அரிசி உப்புமா மற்றும் காய்கறி சாம்பார் அல்லது ரவா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார் அல்லது கோதுமை ரவா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார் வழங்கப்படும்.

வெள்ளிக்கிழமை – ஏதாவது ஒரு கிச்சடி வகையுடன் செவ்வாய்க்கிழமை உணவு பட்டியலின் படி ரவா கேசரி அல்லது சேமியா கேசரி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு 50 கி அளவுள்ள அரசி, கோதுமை ரவை, சேமியா மற்றும் உள்ளூரில் விளையும் சிறு தானியங்கள் வழங்கப்படும். மேலும் 15 கிராம் அளவுள்ள சாம்பார் பருப்பு சமைத்த பின் 150-200 கிராம் அளவுடன் கூடிய உள்ளூரில் கிடைக்கும் காய்கறிகள் வழங்கப்படும் என்றும் குறைந்தது 2 நாட்களுக்கு அதிக சத்து மிகுந்த சிறு தானிய உணவுகளை வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |