தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் அரசு பல்வேறு வகையான நலத்திட்டங்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை குறித்து அறிவிப்பை திருச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கிறார். இந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயனடைய ஆதிதிராவிடர் பழங்குடியினர் உள்ளிட்ட அனைத்து வகுப்பினரும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்களும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதே போல் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பட்டப்படிப்பு தேர்ச்சி உள்ளிட்ட கல்வி தகுதி பெற்றவர்களும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் வேலைவாய்ப்பு உலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்தவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
அத்துடன் மாற்றுத்திறனாளிகளும் இதற்கு விண்ணப்பிக்கலாம் மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு நீட்டிக்கப்பட்டிருப்பதால் இவர்கள் வருமான சான்றிதழ் சமர்ப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் இதற்கு விண்ணப்பிக்க மனுதாரர்கள் அசல் கல்வி சான்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும் அது மட்டுமல்லாமல் ஏற்கனவே உதவித்தொகை பெறுபவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. இந்த உதவித்தொகை மீண்டும் பெற தங்களின் சுய உறுதிமொழி ஆவணத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இதனை அடுத்து தொழிற்கல்வி பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு உதவித்தொகை பெற முடியாது அதனால் தகுதியான நபர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பித்து பயனடையுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.