திருச்சி மாவட்டத்தில் மார்ச் 19ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்க இருப்பதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக படித்து முடித்த பட்டதாரி இளைஞர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்ற வருட இறுதியில் தமிழகத்தில் போடப்பட்டிருந்த ஊரடங்குகளில் தளர்வுகள் அறிவித்தனர். தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இந்நிலையில் அரசு தரப்பில் இருந்து பல வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த வருட துவக்கத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்ததாக குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியிட உள்ளது. அரசின் சார்பில் பட்டம் முடித்த மாணவ மாணவிகளுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. ஒரு பக்கம் தனியார் துறையின் சார்பிலும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி இளைஞர்களுக்கு வேலை கொடுத்து வருகின்றன. இந்நிலையில் தற்போது திருச்சி மாவட்டத்தில் வருகிற 19ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்க இருக்கிறது என திருச்சி மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
இந்த வேலை வாய்ப்புகளில் பங்கு பெறுவதற்கு வேண்டிய ஆவணங்கள் என்ன என்பதை காண்போம். டிகிரி படித்தவர்களாகவும் 18 முதல் 40 வயதிற்குட்பட்ட வேலை தேடுபவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அவர்களது கல்விச் சான்றிதழ்களின் நகல்கள், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், போன்றவற்றை எடுத்து வர வேண்டும் என கூறியுள்ளனர். மேலும் இந்த வேலை வாய்ப்பு முகாம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மார்ச் 19ஆம் தேதியன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடக்க உள்ளது திருச்சி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.