Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் சூப்பர் அறிவிப்பு ஒன்றை  ஆட்சியர் வெளியிட்டுள்ளார். 

தமிழ்நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி வரை, மாவட்ட மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கடந்த ஜனவரி மாதம் (2022) வெளியிட்டுள்ளது.மேலும் இந்த அறிவிப்பின் படி, தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக 75 லட்சத்து 31 ஆயிரத்து 122 பேர் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அவர்களில் ஆண்கள் 35 லட்சத்து 35 ஆயிரத்து 992 பேர்; பெண்கள் 39 லட்சத்து 94 ஆயிரத்து 898 பேர் பெண்கள், 232 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆகும்.

இந்நிலையில் கொரோனாவின் வருகையால் ஏராளமானோர் வேலை இல்லாமல் திண்டாடி வந்த நிலையில், தற்போது நோயின்  தாக்கம் குறைந்ததையடுத்து,இந்த வருட தொடக்கத்திலிருந்தே வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், பதிவு செய்து காத்திருக்கும் வேலை வாய்ப்பற்ற பதிவுதாரர்களுக்கு, உதவித்தொகை ஒன்று வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து திருவள்ளூர் கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் அறிக்கை  ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, உதவித்தொகையினை பெற பொதுப்பிரிவு இளைஞர்களுக்கு தங்கள் கல்வித் தகுதியை பதிவு செய்து, 5 ஆண்டுகளும் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு ஓராண்டும் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே உதவித்தொகை பெற விருப்பம் உள்ளவர்கள், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து பதிவு செய்யலாம் எனவும் வேலைவாய்ப்பு இணையதள முகவரியான https://tnvelaivaaippu.gov.in  அல்லது https://employmentexchange.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று, உதவித்தொகை விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்யலாம்.

அதன் பிறகு, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் துறை அலுவலர் ஆகியோரின் கையொப்பம் மற்றும் முத்திரை பெற்ற படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து, அடுத்த மாதம், 31ஆம் தேதிக்குள் வேலை வாய்ப்பு அடையாள அட்டை, ஆதார், ரேஷன் கார்டு மற்றும் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |