மதுரையில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலால் 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவி அனைவரும் ஆட்டி படைத்தது கொண்டிருக்கிறது. இதனையடுத்து புதிதாக டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது. மதுரை எஸ். ஆலங்குளம் பகுதியில் வசித்து வரும் சத்தியபிரியாவின் இரண்டாவது மகன் திருமலேஷ். இவர் கடந்த 3 நாட்களாக டெங்கு காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்களுக்கு டெங்கு பாதிக்கப்பட்டு 7 வயது சிறுவனான திருமலேஷ் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூத்த மகனான மிருத்தின் ஜெயன் வயது 9 டெங்கு காய்சலால் பாதிக்கப்பட்டு, தற்போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.