தமிழகத்தில் கூட்டுறவு துறைக்கு சொந்தமான கடைகளில் இருக்கும் காலி பணியிடங்களில் 6500 பேர் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். மற்ற துறைகளை விட கூட்டுறவுத்துறை சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் குறைகளை சுட்டி காட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பேசி உள்ளார். அதேசமயம் வாடகை கட்டிடங்களை சொந்த கட்டிடமாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.
கூட்டுறவு சங்கங்களில் பொதுமக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளதால் டெபாசிட் செய்து வருகின்றனர். ரேஷன் கடை ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு நிச்சயம் நிறைவேற்றி தரப்படும். அதே சமயம் புதிதாக அமைக்கப்படும் ரேஷன் கடைகளில் கழிவறை வசதியுடன் கூடிய கடைகள் அமைக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.