Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் விமான கட்டணத்திற்கு…. இணையாக பேருந்து கட்டணம்…. பொதுமக்கள் அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் பண்டிகை தின விடுமுறையை முன்னிட்டு விமான கட்டத்துக்கு இணையாக தனியார் பேருந்து கட்டணம் உள்ளது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு அடுத்ததாக ஆயுதபூஜை பண்டிகை தான் நீண்ட விடுமுறை நாட்களை கொண்டது. இந்த ஆண்டு ஆயுதபூஜை பண்டிகை வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளில் வருகிறது.

மேலும் அதற்கு அடுத்த நாள் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்கள்  மற்றும் 19 ஆம் தேதி மிலாடி நபி ஆகிய பண்டிகைகள் தொடர்ந்து வருகிறது. இதனால் தொடர்ந்து விடுமுறை தினங்கள் வருவதால் வெளியூரில் பணிபுரிபவர் பண்டிகையை கொண்டாடுவதற்காக தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கமாகும். அதற்காக அரசு மற்றும் தனியார் நிறுவன பேருந்துகளின் முன்பதிவு செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். பொது மக்கள் நெரிசல் இன்றி பயணம் செய்வதற்காக தமிழக அரசு 3,000 பேருந்துகள் இயக்குவதற்கு முடிவு செய்துள்ளனர்.

அதனைப்போலவே தனியார் நிறுவன பேருந்துகளும் வழித்தடங்களில் இயங்குகின்றன. இதனால் தனியார் நிறுவனங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதில் குளிர்சாதன வசதியுடன் கூடிய சென்னை- கோயம்புத்தூர் பேருந்தில் ரூ.2800 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதனை போல சென்னை – கோயம்புத்தூர் விமான வழியில் செல்வதற்கு ரூ.3100 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதில் தனியார் நிறுவனப் பேருந்து கட்டணத்திற்கும் விமானம் கட்டண திற்கும் இடையே உள்ள வித்தியாசம் வெறும் ரூ. 300 என்றும் விதிமீறல்கள் தொடர்ந்து நடந்து வருவது அரசு அதிகாரிகள் தெரியும் என்று பொதுமக்கள் தெரிவிப்பதாக கூறுகின்றார். மேலும் பண்டிகைக்கு இரண்டு நாள் மூன்று நாட்களுக்கு முன்னே இந்த நிலமை என்றால் பண்டிகைக்கு முன்தினம் நிலைமை கடுமையாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

எனவே தமிழக முதல்வர் தனியார் பேருந்துகளில் வசூலிக்கப்படும் கட்டண உயர்வை தடுத்து நிறுத்தி நியாயமான கட்டணத்தை வழங்க வழிவகை செய்ய காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |