தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் தலைமையில் வரும் 5ஆம் தேதி மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022-23 ஆம் வருடத்துக்கான பட்ஜெட் இந்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பட்ஜெட் தொடர்பாக விவாதிக்க தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் மார்ச் 5ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெற இருக்கிறது. தமிழக பட்ஜெட்டில் இடம் பெறக்கூடிய அறிவிப்புகள் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.