Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வரும் 12-ஆம் தேதி…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் சூப்பர் நியூஸ்…!!!

கொரோனாவிற்கு தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதனால், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், கேரளாவில் 12 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்தார். சிறுவன் பாதிக்கப்பட்டது குறித்து தகவல் கிடைத்துள்ளது. எனவே கேரள எல்லையோர மாவட்டங்களில் அனைத்து வகையான காய்ச்சல் முகாம்களை நடத்தி கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கேரளாவிலிருந்து வருபவர்களிடம் இருந்து 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். வரும் 12ஆம் தேதி தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தி 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. இதற்காக மாவட்ட கலெக்டர் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |