Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வட மாநிலத்தவர் ஆதிக்கம்…. தொல். திருமாளவன் ஆதங்கம்….!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வட அமெரிக்காவில் தமிழ் சங்கம் சார்பில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த தொல். திருமாவளவன் கூறியதாவது, குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக எதிர்க்கட்சி சார்பில் யஸ்வந்த் சின்கா வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வெற்றி பெற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி விரும்புகிறது.

அதன் பறகு பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை குடியரசு தலைவர் போட்டிக்கு வேட்பாளராக நியமிப்பது பழங்குடியின மக்களை பாதுகாப்பது போன்று இருக்கிறது. இவரின் வெற்றியானது நாட்டை பாதுகாத்து நாட்டின் நம்பிக்கையை நிலைநாட்டும். இவருக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இதனையடுத்து பாஜக அரசு அரசியல் சூதாட்டத்தை செய்கிறது எனவும், மராட்டிய மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்தது. இந்த கூட்டணியை தற்போது பாஜக அரசு உடைத்துள்ளது நாட்டிற்கே மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் வட மாநிலத்தவர் போராட்டம் நடத்துவது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. இவர்களின் போராட்டம் தமிழ்நாட்டில் தமிழர்கள் என்ற அடையாளம் இல்லாதவர்கள் ஆதிக்கம் செலுத்துவது போன்று இருக்கிறது. மேலும் அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று பணிக்காக காத்திருப்பவர்களுக்கு வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துக் கொள்கிறேன் என்றார்.

Categories

Tech |