Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் வாங்க புதிய நடைமுறை….வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!

ரேஷன் பொருட்களை வழங்குவதற்கு, புதிய திட்டம் ஒன்று சோதனையில் இருப்பதாக தமிழக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை பணிகள் தொடர்பாக, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட அலுவலர்களுடான ஆய்வுக்கூட்டமானது  நடைபெற்றது. இக்கூட்டத்தில்  சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலை வகித்தார். மேலும் இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமை வகித்தார். இதையடுத்து  இக்கூட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஆணையர் ராஜாராமன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் சக்கரபாணி பேசியுள்ளதாவது, தமிழகத்தில் திமுக பொறுப்பேற்றதில் இருந்து செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 2 முறை ஆய்விற்கு வந்துள்ளேன். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் 11 லட்சத்து 3 ஆயிரமும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 25,717 குடும்ப அட்டைகளும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 22,633 குடும்ப 15 நாட்களுக்குள் வழங்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் மற்ற மாநிலங்களில் கண் கருவிகள் மூலம் ரேசன் பொருட்களை வழங்கப்பட்டு வருகின்றன. எனவே அந்த திட்டத்தை நமது மாநிலத்திலும் சிறப்பு திட்டமாக செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் அது மக்கள் மத்தியில் சரியாக இருக்கும் பட்சத்தில், தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |