Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் மாதந்தோறும் மலிவு விலையில் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தையும் ரேஷன் கடைகளில் வாங்கிக் கொள்கின்றனர். அதனைத் தொடர்ந்து குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.

அதனால் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களுக்குள் ரேஷன் அட்டை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்குவதற்கு ஏதுவாக நவம்பர் 1 முதல் 3 ஆம் தேதி வரை ரேஷன் கடை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த தேதியில் பொருட்கள் வாங்காத ரேஷன் அட்டைதாரர்கள் தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு நவம்பர் 8ஆம் தேதி ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம்.

இதன் தொடர்ச்சியாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடை ஊழியர் களுக்கும் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. பட்டாசு விற்பனைக்கு எந்த காரணத்தை கொண்டும் நியாய விலைக்கடை பணியாளர்கள் பணியமர்த்தம் செய்யக்கூடாது என்றும் சரகம் மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பண்டகசாலை கொள்முதல் செய்யாத பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது. பட்டாசு விற்பனை மேற்கொள்ள அனுப்பப்படும் பணியாளர்கள் இதனை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |