Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரேஷன் அரிசி…. குடும்ப அட்டைதரர்கள் கடும் அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் வட மாவட்டங்களில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு அரிசியை கடத்தி வருகின்றனர். இந்த அரிசியை பாலீஷ் போட்டு ஆந்திராவிற்கு கிலோ 40 என்ற விலையில் விற்பனை செய்து வருகின்றனர். கடந்த 16 மாதங்களில் மட்டும் ஆந்திர மாநிலத்தில் 13 அரிசி கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதகவும், அரிசி கடத்தப்படுவதாகவும் அதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று முதல்வருக்கு ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதி உள்ளார். இந்த நிலையில் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்தால் மட்டுமே அரிசிச்வாங்க முடியும்.

அதையும் மீறி எப்படி அரிசி கடத்தப்படுகிறது. ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களின் உதவி இல்லாமல் கட்டாயம் இந்த கடத்தல் நிகழாது. இந்த நிலையில் அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாகஏதேனும் மோசடிகள் முரண்பாடுகள் நடைபெறுகிறதா? என்பதை தொடர்ந்து கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி கடத்தலை தடுக்க அனைத்து மாநிலத்தின் அனைத்து எல்லைகளில் வாகனங்களை சோதனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |