Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்து நிறுத்தம்….. திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, மே மாதம் 30 ஆயிரத்தை தாண்டிய போது, ‘ரெம்டெசிவிர்’ மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதனால், சுகாதாரத்துறை சார்பில், கூடுதல் மையங்கள் திறக்கப்பட்டு மருந்து விற்கப்பட்டது. எனினும், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, தனியார் மருத்துவமனைகளுக்கு, ஆன்லைனில் மருந்து விற்பனையை சுகாதாரத்துறை துவக்கியது. தற்போது நோய் பாதிப்பு குறைந்துள்ளதால், மருந்தின் தேவையும் குறைந்துள்ளது.

எனவே மருத்துவ கல்லுாரிகள் வழியே, ஆன்லைனில் ரெம்டெசிவிர் மருந்து விற்பது, வரும் 17ம் தேதியில் இருந்து நிறுத்தப்படுவதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.மருந்து தேவைப்படுவோர், மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்திற்கு சொந்தமான கிடங்குகளில், நேரடியாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |