பெங்களூரு அருகே மலுகூரில் தற்போது ரயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் ரயில் சேவையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி குஜராத் ஓகாவிலில் இருந்து புறப்படும் ஓகா-தூத்துக்குடி விவேக விரைவு ரயில் குண்டக்கல், கடப்பா, ரேணிகுண்டா, ஜோலார்பேட்டை வழியாக மாற்று பாதையில் மார்ச் 4-ந் தேதி இயக்கப்பட உள்ளது.
அதேபோல் தூத்துக்குடியில் இருந்து புறப்படும் தூத்துக்குடி-ஓகா விவேக வாராந்திர விரைவு ரயில் ஜோலார்பேட்டை, ரேணிகுண்டா, கடப்பா, குண்டக்கல் வழியாக பிப்ரவரி 27, மார்ச் 6 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.