Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மே 5ஆம் தேதி…. கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு…. அரசு அதிரடி…..!!!!!

தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் 3வது அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்த சென்ற ஜனவரி மாதம் பல ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைபடுத்தப்பட்டது. அதிலும் குறிப்பாக சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டம் உள்ளிட்ட மக்கள்கூடும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இப்போது கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து இதற்கான தடை நீக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வரும் மே 5ஆம் தேதியன்று வணிகர் தினம் அனுசரிக்கப்பட்டுள்ளது. இதனால் திருச்சியில் வரும் மே 5ஆம் தேதி வணிகா் தினத்தை முன்னிட்டு வணிகர்சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாநாடு நடைபெற இருக்கிறது.

மேலும் இந்த வணிகா் விடியல் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பு உரையாற்ற இருக்கிறார். அத்துடன் இது தொடர்பாக பேரவையமைப்பின் தலைவர் விக்கிரமராஜா கூறியிருப்பதாவது, திருச்சியில் 39வது வணிகர் தினத்தை முன்னிட்டு மே 5ஆம் தேதி மாநாடு நடைபெறவுள்ளது. இதனால் இம்மாநாட்டில் அனைத்து வணிக கடைகளை சார்ந்த வணிகர்களும் கலந்துகொள்ள வேண்டும். மேலும் இந்த மாநாட்டில் வணிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளார்.

இந்த மாநாட்டில் வணிகர்கள் பங்கேற்க ஏதுவாக தமிழகத்திலுள்ள அனைத்து வகையான கடைகளும் பங்குபெறும் அடிப்படையில் வரும் மே 5ஆம் தேதியன்று விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள குமரி முதல் கும்மிடிப்பூண்டி வரை அனைத்து கடைகள், பெரு நிறுவனங்கள், தொழிற்கூடங்கள், உணவகங்கள், மருந்தகங்கள், மால்கள், நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் தங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Categories

Tech |