தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு திமுக தலைமையிலான ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. அவ்வகையில் பல ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. கடந்த 3 நாட்களில் மட்டும் 31 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 5 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு பணியில் இருந்து மாநில அரசு பணிக்கு மாற்றப்பட்டார் ஷிவ்தாஸ் மீனா நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளராகவும், உயர்கல்வித் துறை செயலாளராக கார்த்திகேயன், நெடுஞ்சாலைகள் துறை முதன்மை செயலாளராக தீரஜ் குமார்,கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக ஜவஹர் நியமிக்கப்பட்டுள்ளனர்.