Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 4 சதுப்பு நில பகுதிகளுக்கு….. சர்வதேச அங்கீகாரம்….. மத்திய அரசு அதிரடி….!!!!

சர்வதேச அளவில் சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் வகையில் 1921 ஆம் ஆண்டு ஈரானின் ராம்சர் நகரில் உடன்படிக்கை ஒன்று கையெழுத்திடப்பட்டது. அங்கு உடன்படிக்கை செய்து கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதன் பிறகு 2014 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை 49 புதிய ஈர நிலங்களை ராம்சர் அங்கீகார பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 13 லட்சத்து 26 ஆயிரத்து 677 ஹெக்டர் பரப்பளவு கொண்ட 75 ராம்சர் தளங்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் ராம்சர் தலங்களின் பட்டியலில் 11 ஈரம் நிலங்களை இந்தியா சேர்த்துள்ளது.

அதில் தமிழகத்தை சேர்ந்த 4 சதுப்பு நிலங்கள் அதில் இடம்பெற்றுள்ளது .தமிழ்நாட்டில் அண்மையில் ஆறு சதுப்பு நிலங்கள் ராம்சர் அங்கீகாரத்தை பெற்றனர். அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சித்திரங்குடி பறவைகள் சரணாலயம், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் பேரூர் சதுப்பு நில வளாகம், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடுகூர் பறவைகள் சரணாலயம், முதுகுளத்தூர் அருகில் உள்ள காஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம் ஆகியவை இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது, இதையடுத்து தமிழ்நாட்டில் ராம்சர் அங்கீகாரம் பெற்ற சதுப்பு நிலப்பகுதிகளின் எண்ணிக்கையானது 14 உயர்ந்துள்ளது.

Categories

Tech |