தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை செய்யும் அவரச சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆன்லைனில் இருக்கும் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளில் பணத்தை கட்டி விளையாடும் போக்கு தமிழகத்தில் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் மனவேதனையில் தற்கொலை செய்துகொண்ட இறப்பு சம்பவங்கள் நடைபெற்றும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியைத் தடை செய்வதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். அதன்படி, இதுதொடர்பான சட்டம் இயற்றி அளுநர் ஒப்புதலுக்கு அனுப்பட்டது. அந்த அவரச சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த புதிய சட்டத்தின்படி தடையை மீறி விளையாடினால் ரூ.5000 அபராதமும், 6 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்படும், ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருப்போருக்கு ரூ.10,000 அபராதம் மற்றும் இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும்.