Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல்?… வெளியான திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முன்கூட்டியே நடக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார். அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முன்கூட்டியே நடக்க வாய்ப்புகள் குறைவு என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி சாகு தெரிவித்துள்ளார். கூடுதல் வாக்குச்சாவடிகள் கண்டறியும் பணி நடந்து வருவதால் முன்கூட்டியே தேர்தலுக்கு வாய்ப்பில்லை. ஒரு வாக்குச்சாவடியில் ஆயிரம் வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் 67 ஆயிரமாக உள்ள வாக்குச்சாவடி எண்ணிக்கை 95 1000 ஆக அதிகரிக்க திட்டம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |