தமிழக அரசு மக்களுடைய நலனை கருத்தில்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தப் பட்டு வருகிறது. அந்த வகையில் ஆதரவற்ற மற்றும் உணவுக்கு வழியில்லாமல் வசிக்கும் முதியவர்களுடைய துன்பத்தை போக்கும் விதமாக தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டம் தமிழக அரசு முதியோர் உதவி தொகை திட்டம். கணவன் அல்லது மனைவி போன்ற நெருங்கிய உறவுகள் இல்லாமல் இருப்பவர்கள், மிக நெருங்கிய உறவுகள் அல்லது பிள்ளைகள் இருந்தும் அவர்களால் ஆதரவு கிடைக்காமல் துன்பப்படும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஆதரவற்ற முதியோர் என்று குறிப்பிடப்படுகின்றனர்.
இவர்களுடைய துயரத்தை போகும் விதமாக தமிழக அரசு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கிய வருகிறது. இந்த நிலையில் முதியோர் உதவித்தொகை திடீரென்று ரத்து செய்யப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 1962 ஆம் வருடம் முதியோர் ஓய்வூதியத் தொகை 20 ரூபாயிலிருந்து தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2011 ஆம் வருடம் ஜெயலலிதா முதியோர் உதவித் தொகையை ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தகுதி வாய்ந்தவர்களுடையசம்பந்தமே இல்லாத காரணங்களை கூறி ஏற்கனவே வழங்கப்பட்ட உதவித் தொகை ரத்து செய்யப்பட்டு வருகிறது. இது அபாயகரமானதாக உள்ளது.
கடந்த திமுக தேர்தல் அறிக்கையில் முதியோர் உதவி தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தனர். ஆனால் கொடுமையிலும் கொடுமை தற்போது அதை பறிப்பதாகும். குறிப்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 20,000 முதல் 50 ஆயிரம் வரை ரத்து செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகிறது. இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், ஓய்வு திட்டத்தின் நோக்கம் என்பது ஆதரவு இல்லாமல் உணவு வழியில்லாமல் இருப்பவருக்கு நிதி உதவி வழங்குவது தான். எனவே இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறுபவர்களுக்கு சொத்துக்கள் உள்ளிட்ட வசதிகள் இருந்தால் உதவிகள் நிறுத்தப்படுகிறது. மேலும் சொந்தமாக வீடு தங்களுடைய மகன்கள் அல்லது மகள்கள் வீட்டில் வசிக்கிறார்கள் போன்ற வசதியோடு இருப்பவர்களுக்கும் இந்த நிதி உதவி நிறுத்தப்படுகிறது என்று கூறியுள்ளனர். தமிழக அரசின் இந்த நடவடிக்கை தான் தற்போது பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியும் ஏற்படுத்துகிறது.