Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முதல்முறையாக இயற்கை எரிவாயுவால் இயங்கும் பேருந்து…. காற்று மாசுவே ஏற்படாது…..!!!!

திருப்பூர் மாவட்டத்தில் அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயுவால் இயங்கும் பேருந்து ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கோகுல்நாத் என்ற 33 வயது மிக்க நபர் பேருந்து நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அவர் அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயு என்ற சிஎன்ஜியை எரிபொருளாக வைத்து இயங்கும் பேருந்தை திருப்பூர் -புளியம்பட்டி வழித்தடத்தில் அறிமுகம் செய்துள்ளார். டீசல் விலை தற்போது அதிகமாக உள்ளதால், பயணிகள் எண்ணிக்கையும் குறைந்துள்ளதால் லாபம் அதிகமாக கிடைக்கவில்லை.

அதனால் தமிழகத்தில் முதல் முறையாக சிஎன்ஜி மூலம் இயங்கும் பேருந்தை அவர் அறிமுகம் செய்துள்ளார். இதன் மூலமாக டீசல் என்றால் தினந்தோறும் 7000 ரூபாயும் சிஎன்ஜி என்றால் பேருந்துக்கு ஐந்தாயிரம் ரூபாய் வரையும் செலவாகும் எனவும் 90 கிலோ மீட்டர் கொண்ட ஒரு சிலிண்டருக்கு 450 கிலோமீட்டர் மைலேஜ் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காற்று மாசு ஏற்படாது எனவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |