தமிழகத்தில் கிராம சபை கூட்டத்தை போலவே முதன் முறையாக நகர சபை மற்றும் மாநகர சபை கூட்டங்கள் வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீர் நாள் மற்றும் உள்ளாட்சி நாளாகிய ஆறு நாட்களின் போது கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. அதில் பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அந்த திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
இந்நிலையில் கிராம சபை கூட்டத்தை போலவே இனி தமிழகத்தில் முதன்முறையாக நகர சபை மற்றும் மாநகர சபை கூட்டங்கள் நடைபெறும். நகரப் பகுதிகளில் உள்ள மக்களின் குறைகளை கேட்டு அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யக் கூடிய வகையில் இந்த நகர மற்றும் மாநகர சபை கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.