நாட்டில் கழிவுநீர் தொட்டியில் மனிதர்கள் இறங்கி வேலை செய்வதால் நிகழும் உயிரிழப்புகள் தொடர்கதையாகி வருகிறது. இதனை தடுக்க வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவுகள் பல இருந்தாலும் சட்டவிரோதமாக இத்தகைய செயல்களில் ஈடுபட வைக்கின்றனர். தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே வந்தாலும்கழிவு நீர்த் தொட்டிக்குள் இறங்கி இயந்திரங்களின் பயன்பாட்டிற்கு வரவில்லை என்று தொடர்ந்து கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மனித மலத்தை சக மனிதனே சுத்தம் செய்வதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சென்னை ஐஐடியின் “ஹோமோசெப்” என்ற ரோபோ ஈடுபடுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக 10 இடங்களில் ரோபோக்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும், தூய்மை பணியாளர்களே அதை இயக்குவார்கள் எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலம் மற்றும் மலக்குழி மரணங்கள் முற்றிலும் ஒழியும்.