தமிழகத்தில் முதல் முறையாக நடமாடும் சுடுகாடு சேவை தொடங்கப்பட்டுள்ளது. கிராமங்களுக்கு சென்று சேவைகளுக்கும் வகையில் நடமாடும் சுடுகாடு வசதி தொடங்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இனி பிணத்தை எரிப்பதற்கு சுடுகாடு செல்ல தேவையில்லை என்றும் வீட்டிற்க்கே வந்து பிணத்தை எடுத்து அஸ்தியை ஒரு மணி நேரத்தில் கொடுத்துச் செல்லும் அளவிற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
யாராவது ஒருவர் திடீரென இறந்து விட்டால் சுடுகாட்டிற்கு கிலோமீட்டர் கணக்கில் பிணத்தை எடுத்துச் சென்று அதன் பிறகு காத்திருந்து அஸ்தியை பெற்று வரும் நிலை தற்போது நிலவி வருவதாலும் ஒரு சில கிராமங்களில் சுடுகாடு வசதி என்பது இல்லை என்பதாலும் அவர்களுக்கு ஏற்ற இடத்தில் பிணத்தை எரித்து விட்டு வரும் நிலை உள்ளது.
இந்நிலையில் தற்போது பிணத்தை எளிதில் தகனம் செய்யும் விதமாக நடமாடும் சுடுகாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக மாநகராட்சி உடன் இணைந்து ஆத்மா அறக்கட்டளை என்ற அமைப்பை இந்த திட்டத்தை தொடங்கியுள்ளது. இதற்கான கட்டணம் 7500 என்றும் இந்த கட்டணத்தை செலுத்தி விட்டால் ஒரு மணி நேரத்தில் வீட்டிற்கு வந்து பிணத்தை எரித்து அஸ்தியை கொடுத்துவிட்டு சென்று விடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.