அதிமுக முன்னாள் அமைச்சர் பாப்பா சுந்தரம்(86) காலமானார். இவர் கரூர் மாவட்டம் வலைய பட்டியை சேர்ந்தவர். சம்பவத்தன்று இவர் வீட்டில் தவறி விழுந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் பாப்பா சுந்தரம் உயிரிழந்தார். இவர் 1991 -2001இல் குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார். இதையடுத்து பிற்பட்டோர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். அதிமுக அமைப்புச் செயலாளராகவும் இருந்துள்ளார்.
Categories
தமிழகத்தில் முக்கிய அரசியல் பிரபலம் காலமானார் – சோகம்…!!!
