தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் பிப்ரவரி 16 முதல் மழலையர் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. தனியார் பள்ளிகளின் கோரிக்கையை ஏற்று பிப்ரவரி 16 முதல் பிரீகேஜி, எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் ஆரம்பமாகும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த வகையில் நேற்று முதல் மழலையர் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 2,381 அங்கன்வாடிகளில் LKG, UKG மூடப்படும் என்று தகவல் வெளியானது. இந்த தகவல் தவறானது என்று தொடக்கக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. மேலும் LKG, UKG வகுப்புகளில் பணியமர்த்த கலந்தாய்வு நடைபெற்றது என்றும், ஏற்கனவே பணி மாறுதல் செய்யப்பட்டவர்களை மீண்டும் முந்தைய பணி இடங்களிலேயே பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தொடக்கக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.