Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு….!! எந்தெந்த பகுதிகள் தெரியுமா…? இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!

புதுச்சேரியில் அடுத்த இரண்டு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, வரும் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும் எனவும் 10 ஆம் தேதி தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு வரும் 11ம் தேதி தென் கடலோர மாவட்டங்கள் வட கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் மற்ற இடங்களில் வறண்ட வானிலையே நிலவும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுமெனவும் பனிமூட்டம் இருக்குமெனவும் வெயிலைப் பொருத்தவரை 37 டிகிரி செல்சியஸ் வரை அடிக்க கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |