Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் என பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் குறையாத நிலையில் பள்ளி கல்லூரிகளை திறப்பது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் சில மாநிலங்களில் பொதுத்தேர்வை சந்திக்க உள்ள உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அதே போல் தமிழகத்திலும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு களை தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை மூட வேண்டும். அதோடு ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் கற்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |