Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை?…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்தது. இதனால் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்து, ஜனவரி 31 ஆம் தேதி வரை ஆன்லைன் வகுப்புக்கு அனுமதி வழங்கியது. இருப்பினும் மேலும் இது நீடிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 1 -12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு ஜனவரி 30 ஆம் தேதி அதிரடியாக அறிவித்தது.

அதன்படி நேரடி வகுப்புகள் நடைபெறாத காரணத்தினால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கும் என்று வருந்திய பெற்றோர்களுக்கு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது ஆறுதல் அளித்தது. இந்நிலையில் பிப்ரவரி 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் விடுமுறை அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை கருத்தில் கொண்டு வரும் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி தொடங்குகிறது. இந்த தேர்தலின் முடிவுகள் பிப்ரவரி 22ம் தேதி வெளியாகிறது. இதன் காரணமாக  பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க கல்வித்துறை முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அனைத்து தரப்பிலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |