இந்தியாவில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் பரவி வருவதால் தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடும் நிலை ஏற்படும் என்று தகவல் வெளியாகி வருகின்றது.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. பின்னர் தொடக்க மற்றும் நடுநிலை வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் அடுத்து தாக்குதலாக உருமாறிய ஒமைக்ரான் தொற்று பரவிவருகிறது. இந்த உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று விரைவில் பரவக்கூடிய தன்மை கொண்டது என்று மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது தமிழகத்தில் பள்ளிகளில் சில மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகின்றது. இந்த ஒமைக்ரான் வைரஸாக இருக்குமோ? என்று பலரும் அஞ்சுகின்றனர். இந்த சூழலில் பள்ளிகளை மூடுவது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் விரைவில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகே பள்ளிகளை மூடுவதா? இல்லையா? என்பது குறித்து தகவல் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.