Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல்… பெரும் பரபரப்பு… பெற்றோர்கள் அச்சம்…!!!

தமிழகத்தில் அம்மாபேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 20 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதால் பள்ளிகள் மூடப்பட்டன.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மே 3ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி முடிவடையும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது.

இந்நிலையில் சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. அதன்படி பாபநாசம் அருகே அம்மாபேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 20 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதனால் சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பீதி அடைந்துள்ளனர். பள்ளிகளை மூடி கிருமி நாசினிகள் தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Categories

Tech |