தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் மீண்டும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, “தமிழகத்தில் நாளை மறுநாள் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. வருகின்ற நவம்பர் 11ஆம் தேதி முதல் தமிழகத்தில் இருக்கின்ற கடலோர மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும்.
சென்னை மற்றும் நாகை வரையில் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்” என்று தெரிவித்துள்ளது.