சென்னையிலுள்ள நகர்புற சுகாதார மையத்தில் கர்ப்பிணி பெண்களை பரிசோதனை செய்வதற்கான கலர் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவிகள் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை கண்டறியும் ஸ்பைரோ மீட்டர் கருவிகளை பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, பிரிட்டன் தலைநகர் லண்டனில் உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் யாரும் பயப்படத் தேவையில்லை. தடுப்பூசியைப் அடுத்தவரை 96 சதவிகிதம் முதல் தவணையும் 72 சதவிகிதம் இரண்டாம் தவணையும் போடப்பட்டு விட்டது. அதோடு 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. எனவே யாரும் அச்சப்பட வேண்டாம் என அவர் கூறியுள்ளார்.