தமிழகத்தில் கொரோனா உரு மாற்றம் பெற்றுள்ள நிலையில் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பிறகு ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகின்றார். அதற்கு முன்னதாக ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார். அதன்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக தலைமைச் செயலகத்தில் நேற்று பிற்பகல் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தினார். அதில் அவர் கூறியது, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வருகிறது.
அதனால் அதில் மக்கள் அலட்சியம் காட்டி வருகிறார்கள். தற்போது கொரோனா உருமாற்றம் பெற்றுள்ள நிலையில், மீண்டும் ஊரடங்கு நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. மேலும் ஜனவரி மாதத்திற்கான தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகளை முதல்வர் அறிவிப்பார் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், மருத்துவ நிபுணர்கள் உடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார். அதன்பிறகு ஊரடங்கு நீட்டிக்க படுவது பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.