Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…. அமலாகுமா ஊரடங்கு?…. அமைச்சர் திடீர் விளக்கம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய ஒரு சில மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தால் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழக முழுவதும் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்று அனைத்து மாவட்ட நிர்வாகம் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் குரங்கு அம்மை நோய் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கேரளா மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை யாருக்கும் இந்த பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ஊரடங்கு அமல்படுத்த இப்போதைக்கு வாய்ப்பில்லை எனவும் கூறிஉள்ளார்.

இந்நிலையில் குரங்கு அம்மை நோய் மற்றும் கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் பட்சத்தில் இது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அது மட்டுமல்லாமல் தற்போது பண்டிகை காலம் நெருங்கி வருவதால் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை தமிழக அரசு தீவிர படுத்தியுள்ளது.

Categories

Tech |