Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின் கட்டணம் உயரும் அபாயம்?…. ஆய்வு குழு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!??!

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் அனல்மின் நிலையங்களுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த அனல் மின் நிலையங்களின் கட்டுமான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டால், தமிழக அரசின் நிதி நிலைமை மேலும் மோசமடையும் வாய்ப்பு உள்ளது என்று கிளைமேட் ரிஸ்க் ஹொரைசான்ஸ் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. உடன்குடியில் புதிய அனல்மின் நிலையங்களை அமைப்பதால், தமிழகத்தில் மின் கட்டணங்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும் என்று கிளைமேட் ரிஸ்க் ஹொரைசான்ஸ் தெரிவித்துள்ளது.உடன்குடி ஸ்டேஜ் 1 & ஸ்டேஜ் 2 மின்திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் தமிழக அரசின் கடன் மேலும் 20,000 கோடி ரூபாய் வரை அதிகரிக்கும்.

இதன்மூலம் நுகர்வோருக்கான மின் கட்டணம் உயரக்கூடும் அல்லது மாநில அரசும் மின்வாரியத்திற்கு அளிக்கும் மானியங்களை அதிகரிக்க இந்த திட்டம் வழிவகுக்கும். இதுபோன்ற நிலக்கரி அனல்மின்நிலைய திட்டங்களை ஆரம்பிப்பதற்கு பதிலாக மின்கல சேமிப்புடன் கூடிய பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் ஈடுபட்டால், 2024-ஆம் ஆண்டு முதல் 2030-ஆம் ஆண்டு வரையிலான 6 ஆண்டு காலத்தில் தமிழ்நாடு அரசால் 15 முதல் 20,000 கோடி ரூபாய் வரை 2030-ஆம் ஆண்டு வரையிலான 6 ஆண்டு காலத்தில் தமிழ்நாடு அரசால் 15 முதல் 20,000 கோடி ரூபாயை மிச்சப்படுத்த முடியும் என்று க்ளைமேட் ரிஸ்க் ஹொரைசான்ஸ் மேற்கொண்ட White Elephants-New coal plants threatenen Tamil Nadu Financial Recovery என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

மேலும் உப்பூரில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்த 1600(2× 2800) மெகாவாட் திறன் கொண்ட அனல்மின்நிலையத் திட்டம் சட்ட ரீதியாக பல தடைகளை எதிர் கொண்டதால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் அந்த திட்டத்தை உடன்குடி மாற்றுவது குறித்து பரிசீலனை செய்து வருகிறது. ஏற்கனவே உடன்குடியில் 600 மெகாவாட் உற்பத்திதிறன் கொண்ட 2 அனல் மின் நிலையங்களை அமைக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்விரண்டுமே 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே முன்மொழியப்பட்ட திட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு பொறுப்பேற்ற கடந்த சில மாதங்களில் தமிழ்நாட்டில் சிக்கலான நிதி நிலையை சரி செய்வதற்கு முன்னுரிமை அளித்துவருகிறது. இந்தநிலையில், இந்த புதிய அனல்மின்நிலையத்தால் ஏற்படக்கூடிய நிலை சிக்கல் குறித்து எச்சரிப்பது மிகவும் அவசியமாகும்.

மேலும் தமிழகத்தின் நிதிநிலை சிக்கல் குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஏற்கனவே வெள்ளை அறிக்கை ஒன்றின் மூலம் தெளிவாக கூறியுள்ளார். தமிழகத்தின் நிதிநிலையை மீட்டெடுக்க பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில், நிதிச்சிக்கலில் கவலைக்குரியது மாநிலத்தில் நிலுவையில் உள்ள கடன் உத்தரவாதங்கள் தான். அவற்றில் பெரும்பாலானவை மின் துறையிலேயே இருக்கின்றன. இந்த நிலைமையை உடன்குடி அனல் மின்நிலைய திட்டங்கள் மேலும் மோசமாக்கும் என்று க்ளைமேட் ரிஸ்க் ஹொரைசான்ஸ் தனது அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளது. மேலும் மாநிலத்திற்கு மலிவான விலையில் மின்சாரம் கிடைப்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.

இந்தநிலையில், உடன்குடி அனல்மின் நிலையங்களில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்திற்கான செலவு மிகவும் அதிகம். இதுகுறித்து இந்த ஆய்வறிக்கையின் இணை எழுத்தாளரும், கிளைமேட் ரிஸ்க் ஹொரைசான்ஸ் அமைப்பின் மூத்த ஆய்வாளருமான ஆஷிஷ் பெர்னாண்டஸ் கூறுகையில், கடந்த 5 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் பொருளாதாரம் வியக்கத்தக்க முறையில் மாறியுள்ளது. நிலக்கரி அனல்மின் நிலையங்களில் இருந்து உற்பத்தியாகும் 1 யூனிட் மின்சாரத்துக்கு ரூபாய் 6.7 முதல் 8.2 வரை செலவாகிறது. மேலும் மின்கல சேமிப்பகத்துடன் கூடிய பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க மின்சாரம் தற்போது யூனிட் ஒன்றுக்கு 5 ரூபாய்க்கும் தனித்த பரவலாக்கப்பட்ட, புதுப்பிக்கத்தக்க மின்சாரம் 3 ரூபாய்க்கும் குறைவாக கிடைக்கிறது.

இந்த விலையானது 2025 -ஆம் ஆண்டில் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பாண்டு இறுதிக்குள் உருவாகும் கூடுதல் மின் தேவையை மின்கலத்துடன் பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் பெற்றால் 2024 முதல் 2030-ஆம் ஆண்டுக்குள் இடைப்பட்ட காலத்தில் 15 முதல் 20,000 கோடிகளை மாநில அரசு சேமிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன் தெரிவிக்கையில், தமிழ்நாட்டில் நீண்ட காலமாக கண்டுகொள்ளாமல் விடப்பட்ட சுற்றுச்சூழல் அதற்காகத் திமுக அரசு தெரிவித்துள்ளது. இது எந்த அளவிற்கு முக்கியமானதோ அதே அளவிற்கு மாசு ஏற்படுத்தும் புதிய திட்டங்களை உருவாக்காமல் இருப்பதும் மிகவும் முக்கியமானது.

மேலும் கிளைமேட் ரிஸ்க் ஹொரைசான்ஸ் மேற்கொண்டுள்ள இந்த ஆய்வு, புதிய நிலக்கரி அனல்மின் நிலையங்களை அமைப்பது சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானவை மட்டுமல்ல. மாநிலத்தின் நிதி ஆதாரம் தீங்கு விளைவிக்கும் என்பதை நிரூபிப்பதாக இருக்கிறது. மேலும் அனல்மின் நிலையங்களை, சுற்றிவாழும் மக்களுக்கு சுகாதார சீர்கேடு வாழ்வாதார பாதிப்புகளும் இருக்கின்றன. எனவே அண்மையில் நிகழ்ந்த நிலக்கரி விநியோக நெருக்கடியானது. தமிழ்நாட்டின் எரிசக்தி ஆற்றல் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்ததை நாம் பார்க்கிறோம் என்று கூறியுள்ளார்.

மேலும் உடன்குடி ஸ்டேஜ் 1 அண்ட் ஸ்டேஜ் 2 என்ற 2 திட்டங்களுக்கும் 5 முதல் 7 ஆண்டுகளுக்கு வருடாந்திர 5,000 கோடி ரூபாய் செலவழிக்க வேண்டும் 2024-2030 வரையிலான காலத்தில் இது கிட்டத்தட்ட 20,000 கோடி ரூபாயாக இருக்கும். எனவே 2021- ஆம் ஆண்டு ஜூலை வரை உடன்குடி அனல் மின் நிலையம் ஸ்டேஜ் 1 & ஸ்டேஜ் 2-விற்கு 6,155 கோடி செலவாகியுள்ளது. இந்தநிலையிலேயே இந்தத் திட்டத்தை கைவிட்டு விட்டால், ஆனால் திட்டத்தை தொடர்வதன் மூலம் 2030-களில் ஏற்படப்போகும் மிகப்பெரிய நிதிச்சுமை தவிர்க்க முடியும் என்று இந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

Categories

Tech |