Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின் கட்டணம் குறைவு…. யார் யாருக்கு என்ன பலன்?…. இதோ முழு விபரம்….!!!!

தமிழகத்தில் சிறு-குறு தொழில் நிறுவனங்களுக்கு ஒருநாளின் உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் விதிக்கப்பட்டு இருந்த மின்கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “2022-2023 வருடத்திற்கான திருத்தியமைக்கப்பட்ட மின்சார கட்டணம் 10/09/2022 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இப்போது உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணத்தின் அடிப்படையில் சிறு-குறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் அதிகப்படியான கட்டணத்தை செலுத்த வேண்டி இருப்பதால், ஒரு நாளின் உச்சப்பட்ச பயன்பாட்டு நேரத்தில் விதிக்கப்பட்ட மின் கட்டணத்தை (Peak Hour Charges) குறைக்குமாறு பல தொழில்நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

சிறு-குறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் பொருளாதாரவளர்ச்சி, வேலைவாய்ப்பு வழங்குவதில் முக்கியமான பங்காற்றுவதை கருதி அவர்களின் கோரிக்கையினை ஏற்று குறைந்தழுத்த மின்இணைப்பு கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் வசூலிக்கப்படும் மின் கட்டணத்தை 25 சதவீதத்தில் இருந்து 15% ஆக குறைக்கலாம் என முடிவுசெய்து உரிய கொள்கை வழிகாட்டுதல் வழங்க அரசு ஆணையிட்டு உள்ளது. அவ்வாறு மின்கட்டணத்தை குறைப்பதால் தமிழகத்திலுள்ள சிறு-குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களானது அதிகளவில் பயன் பெறும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகே அரசின் இந்த அறிவிப்பால் சிறு-குறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளது.

Categories

Tech |