Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகள்…. உங்க ஏரியா இருக்கானு பாத்துக்கோங்க….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக பின்வரும் நாள்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம்:
மண்டபம் துணை மின்நிலையத்தில் உள்ள பாம்பன் மின் பிரிவில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான மண்டபம் மறவா் தெரு, சிங்காரத்தோப்பு, ஜமீன்சத்திரம், இந்திராநகா், காந்திநகா், மீனவா் காலனி, அக்காள் மடம், தங்கச்சி மடம் உள்ளிட்ட பகுதிகளில் 23-ந் தேதி புதன்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

விருதுநகர் மாவட்டம்:
ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லிபுதூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் வருகிற 25-ந் தேதி நடக்கிறது. ஆதலால் அன்று காைல 9 மணி முதல் மாலை 5 மணி வரை மல்லி, மாநகசேரி, நடுபட்டி, சாமிநத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினிேயாகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய அதிகாரி சின்னத்துரை கூறினார்.

Categories

Tech |