புயல் கரையை கடக்கும்போது குறிப்பிட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சர் தங்கமணி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “நாமக்கல் மற்றும் திருச்சி சாலையை நான்கு வழி சாலையாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு முன்னதாக முதல்வர் இதனை அறிவித்திருந்தார். அதற்காக 15 கோடி மதிப்பீட்டில் சாலை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கடந்த வாரம் ஏற்பட்ட நிவர்புயலால் மின்சார வாரியத்திற்கு தற்போதுவரை 64 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது பாதுகாப்பு நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. அதனைப் போலவே புரெவிபுயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகத்தைப் பொறுத்தே மின்சாரம் பல இடங்களில் நிறுத்தப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.