Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின்கட்டண உயர்வு நிச்சயம்….. மின்வாரியம் சூசகம்….!!!!

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார். மத்திய அரசின் அழுத்தம் காரணமாக மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 200 யூனிட்டுகளுக்கு மேல் 2 மாதங்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27.50 ரூபாயும், 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72.50 ரூபாயும் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல 2 மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 18.82 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.147.50 உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும் 100 யூனிட் வரையிலான இலவச மின்சாரம் தொடரும் என்றும் குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 2 மாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து, சென்னையில் மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறது. ஆலோசனை கூட்டத்தில், 4,500 பேர் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் அவர்களுக்கு பதிலளித்துள்ள மின்வாரியம், “மத்திய அரசின் வழிகாட்டுதல்படி மின் விநியோக முறையை வலுப்படுத்த, 8 ஆண்டுகளுக்கு ஒருமுறை மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பது நிபந்தனை. அதை செய்யாவிட்டால் மாநில அரசுக்கு ரூ.10,793 கோடி மானியங்கள் வழங்கப்படாது” என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |