Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வு எப்போது?…. மக்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து மின் கட்டணங்களை அடுத்த ஓரிரு நாட்களில் உயர்த்துவதற்கான பணிகளில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் மின்வாரியம் மின் பயன்பாடு மற்றும் புதிய மின் இணைப்பு வழங்குவதற்கான கட்டணங்களை உயர்த்தி தர கோரிய மனுக்களை ஆணையத்திடம் கடந்த ஜூலை 18ம் தேதி சமர்ப்பித்தது. அந்த மனுக்கள் தொடர்பான ஆணையம் மூன்று நாட்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தியது. அதில் பலரும் மின்கட்டணங்களை உயர்த்த எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் நியமிக்காததால் மின்கட்டண உயர்வுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. அதனால் திட்டமிட்டபடி இந்த மாதம் ஒன்றாம் தேதி முதல் மின்கட்டணத்தை உயர்த்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் நீதிமன்ற தடை உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, ஆணையம் மேல்முறையீடு செய்தன. இதனை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை மின் கட்டண உயர்வு குறித்து முடிவு எடுக்க விதித்த தடையை விலக்கியதுதமிழகத்தில் மின்சார கட்டணங்களை உயர்த்துவது தொடர்பாக ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் நேற்று விரிவாக ஆலோசனை நடத்தினார்கள். இதனால் விரைவில் மின் கட்டணங்கள் உயர்த்துவதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |