தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இதனால் அனைத்து நாடுகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் 29 நாடுகளில் பரவி வருகிறது.
அதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 2 பேருக்கும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் பாதுகாப்பு நடவடிக்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் அலட்சியமாக இல்லாமல் விரைந்து தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதில் மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் ரேஷன் கடை, சூப்பர் மார்க்கெட், திரையரங்கு மற்றும் துணிக்கடை உள்ளிட்ட 18 பொது இடங்களுக்கு செல்ல மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். அதனைப்போலவே திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பொது இடங்களில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களின் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவிக்காத நிலையில் 2 மாவட்டங்களில் மினி ஊரடங்கு அறிவித்துள்ளது.