Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாநில கல்விக்கொள்கை…. அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி….!!!

தமிழகத்தில் மாநில கொள்கை உருவாக்கும் திட்டம் முதல்வர் ஸ்டாலினுக்கு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் .தெரிவித்துள்ளார் இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

தமிழகத்தில் தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து முதற்கட்டமாக 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெற்று வருகின்றது. அடுத்ததாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டது. நடப்பு ஆண்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று திருச்சியில் பள்ளி ஒன்றில் பேசிய அவர் மாநில கல்வி கொள்கையை வடிவமைப்பதற்கான குழுவில் யார் இடம்பெற வேண்டும் என்பதற்கான பட்டியல் பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றது. இதுகுறித்து முதன்மை செயலாளருடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் விரைவில் மாநில கல்வி கொள்கை அறிமுகம் செய்யப்படும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |