சிறுபான்மை மாணவர்கள் உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி செலவினங்களுக்காக குறிப்பிட்ட உதவித்தொகையை வழங்கி வருகிறது. இந்த அரசு உதவித் தொகையை பெற அதிகாரப்பூர்வ இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். மேலும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 11ம் வகுப்பு முதல் பி.எச்டி. உள்ளிட்டவற்றை படித்து கொண்டு இருப்பவராக இருத்தல் வேண்டும்.அத்துடன் இதனை பெற சிறுபான்மையின மாணவர்கள் இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய, புத்த, பாா்சி, ஜெயின் மதங்களைச் சாா்ந்தவராக இருத்தல் வேண்டும். மேலும் சிறுபான்மையின மாணவ, மாணவியரிடமிருந்து 2021-22 ஆம் ஆண்டுக்கான பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்பங்களை ஜனவரி 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினா் கல்வி உதவித்தொகைக்காக விண்ணப்பித்து வருகின்றனர்.இவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்களை அனைத்து கல்வி நிலையங்களும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் இதனைத் தொடர்ந்து தகுதியான சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற விரும்புவர்கள் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.