Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு…. எப்போது தெரியுமா…? வானிலை மையம் தகவல்…!!!!

தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை,தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பிப்ரவரி 10ஆம் தேதி மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று (பிப் 8) மற்றும் நாளை (பிப் 9) ஆகிய இரண்டு தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவும் என கூறியுள்ளார்.மேலும் பிப்ரவரி 10 மற்றும் 11 ஆகிய நாட்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

பெரும்பாலும் ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும். இதனை அடுத்து தென் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ,மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் பிப்ரவரி 10ஆம் தேதி மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் மற்றும்  பிப்ரவரி 11-ஆம் தேதி தென் மற்றும் வட தமிழக கடலோர மாவட்டங்கள்,  புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது.

ஆனால் சென்னையை பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்  எனவும் அதிகபட்சமாக  32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 22 டிகிரி செல்சியஸ் ஒட்டிய வெப்பநிலையும் இருக்கும்  என சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியுள்ளார்.

Categories

Tech |