தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் மக்களுக்கு தேவையான மருந்துகள் இல்லை என தினம் தோறும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.அதே சமயம் மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கும் தேவையான மருந்துகள் இருப்பதில்லை எனவும் கூறப்படுகிறது.இந்நிலையில் தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை எனவும் மருத்துவமனைகளில் மருந்து இல்லை என்றால் உடனே புகார் அளிக்கலாம் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய இவர், தமிழகத்தில் தற்போது போதை பொருள் பயன்பாடு குறைந்துள்ளது. கஞ்சா பயிரிடுதல் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுகிறது. தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு என்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.மருத்துவமனைகளில் மருந்து இல்லை என்றால் 104 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.