Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு எப்போது?…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோணா பரவலை கட்டுப்படுத்தும் மிதமாக மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இன்று 8வது மெகா தடுப்பூசி முகாம் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென அடுத்த வாரத்திற்கு முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அதற்கு பதிலாக வீடு தேடிச் சென்ற தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை சாந்தோம் பகுதியில் இன்று காலை முதல் நடந்து வரும் தடுப்பூசி போடும் பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஒவ்வொரு தொகுதியிலும் எத்தனை வாக்காளர்கள் இருக்கிறார்கள், அவர்களின் தகுதி வாய்ந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.இந்தத் திட்டத்தின்படி பயனாளிகளை கண்டறிய வீடு தேடிச் சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் படி வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடத்தப்படும். இதற்கு மத்திய அரசும் உறுதுணையாக இருந்து வருகிறது.பொதுமக்களும் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த சூழலில் மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ஏதாவது பிரச்சினை உள்ளதா? அரசு தரப்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அட்வகேட் ஜெனரலின் ஆலோசனையை கேட்டு இருக்கிறோம்.அவரது வழிகாட்டுதல் கிடைத்தவுடன் தீபாவளி விடுமுறை முடிந்த பிறகு மருத்துவ கலந்தாய்வு நடத்துவது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |