Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் மனதை உருக்கும் அதிர்ச்சி சம்பவம்… So Sad…!!!

மதுரை முத்துப்பட்டி பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவரின் மகன் ஜெய்பிரகாஷ். இவருக்கு 10 வயது ஆகிறது. இவர் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா காலத்தில் பள்ளிகள் திறந்த நிலையில் ஆன்லைன் மூலமாக படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதற்காக ஜெய்பிரகாஷ்க்கு ஸ்மார்ட்போன் ஒன்றை அவரது தந்தை ரஞ்சித் குமார் வாங்கி கொடுத்துள்ளார். அந்த போனில் ஜெய் பிரகாஷ் பாடம் படிக்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் அதிகமாக விளையாட்டுகளை விளையாடி வந்துள்ளார். இதனால் அவரது தந்தை ரஞ்சித்தை மிக கடுமையாக கண்டித்து, அவரிடம் இருந்து செல்போனை வாங்கி படிப்பிற்காக மட்டும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த ஜெய்பிரகாஷ் நேற்று இரவு வீட்டில் இருந்த மின்விசிறியில் போர்வையின் மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சிறுவனின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவர்கள் செல்போன் பயன்பாட்டிற்கு அடிமையாகி வரும் சூழலில், மேலும் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக குழந்தைகள் செல்போன்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் இது போன்ற பிரச்சனைகள் நடந்து வருகின்றது. இதுபோன்ற சம்பவங்கள் அனைத்தும் பெற்றோர்களுக்கும் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |